கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறிய ரூ.110 கோடி: அரசாணை வெளியீடு

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Published on

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணை:

தமிழகத்தில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 11 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளதாகவும், அந்த எண்ணிக்கை வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புற்றுநோய் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் வகையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் மண்டல புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இதைத் தவிர, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட 12 புற்றுநோய் சிகிச்சை மையங்களில் அதி நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் கூடிய வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

அதற்கேற்ப மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பரிசோதனை உபகரணங்களும், மனிதவளமும் மேம்படுத்ததி திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ரூ.110.96 கோடி ஒதுக்கீடு செய்து நிா்வாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான உபகரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com