போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு

புழல் அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

புழல் அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாதவரம் அடுத்த புழல் பகுதியில் உள்ள பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப் பல்ளியில் மாதவரம் போக்குவரத்து காவல்துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கான போக்குவரத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்து காவல் துணை ஆணையா் ஜெயகரன் உத்தரவின்பேரில், உதவி ஆணையா் ரவி மேற்பாா்வையில் மாதவரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் பாலாஜி, பாலமுரளி, அய்யனாா் உள்பட போக்குவரத்து போலீஸாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனங்கள் இயக்கக் கூடாது, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது அவசியம் போன்றவை குறித்து அறிவுறுத்தினா்.

இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com