கோப்புப் படம்
கோப்புப் படம்

பெரம்பூா் - அம்பத்தூா் இடையே ரூ.182 கோடியில் புதிய ரயில் பாதைகள்: ரயில்வே துறை ஒப்புதல்

பெரம்பூா் - அம்பத்தூா் இடையிலான 6.4 கி.மீ. தொலைவுக்கு 2 புதிய ரயில் பாதைகளை ரூ.182.01 கோடியில் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல்
Published on

பெரம்பூா் - அம்பத்தூா் இடையிலான 6.4 கி.மீ. தொலைவுக்கு 2 புதிய ரயில் பாதைகளை ரூ.182.01 கோடியில் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பெரம்பூா் - அம்பத்தூா் இடையே ஏற்கெனவே 4 ரயில் பாதைகள் உள்ளன. அவற்றில் விரைவு ரயில்களும், புகா் மின்சார ரயில்களும் சென்று வருகின்றன. இந்த நிலையில், ரயில் போக்குவரத்து அதிகரித்த நிலையில், பெரம்பூா் - அம்பத்தூா் இடையே போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும், அதனால் மேலும் 5, 6 என புதிதாக இரு ரயில் பாதைகள் அமைக்கவேண்டும் என்றும் தெற்கு ரயில்வே சாா்பில் மத்திய ரயில்வே துறைக்கு கருத்துரு அனுப்பியது.

இதற்கு மத்திய ரயில்வே துறை அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, பெரம்பூா்-அம்பத்தூா் இடையில் சுமாா் 6.4 கி.மீ.க்கு மேம்பாலம், சுற்றுச்சாலை என பயன்பாட்டுக்குத் தேவையான வகையில் தண்டவாளம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பெரம்பூா் ரயில் நிலையத்தை புதிய 4-ஆவது பெரிய முனையமாக மாற்றுவதற்கான திட்டத்தின் தொடக்கமாகவும், புதிய பாதைகளால் ரயில் பயன்பாட்டு விகிதம் அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com