ஜூலை 20ல் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றி...
tvk vijay
தவெக தலைவர் விஜய்
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை மறுநாள்(ஜூலை 20) நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

புதிய கட்சியான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் மாநாடு, பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம் என பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நாளை மறுநாள்(ஜூலை 20) சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தவெகவில் ஒரு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் விஜய் அதனை வெளியிடப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை என்ற இலக்குடன் தவெக தொண்டர்கள் தங்கள் பணியைத் தொடங்கவுள்ளனர். இதுதொடர்பாகவும் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

தவெகவின் 2-வது மாநாடு வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Tamilaga Vettri Kazhagam district secretaries meeting is to be held on July 20 at the party office in Panayur, Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com