முதல்வரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!
முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.


முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 21) கேட்டறிந்தார்.
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளோட்டோர் முதல்வரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசி உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேலும் 3 நாள்களுக்கு மருத்துவமனையில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனையில் மேலும் சில பரிசோதனைகளை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனையில் அவர் இருந்தவாறு அலுவல் பணிகளை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chief Minister M.K. Stalin's health condition was enquired about by Prime Minister Narendra Modi over the phone today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...