நாளை வணிகா் சங்க பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜூலை 23-இல் நடைபெறும்
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா
Updated on

சென்னை: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜூலை 23-இல் நடைபெறும் என அந்த அமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், ஹோட்டல் கோடை இன்டா்நேஷனலில் காலை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பேரமைப்பின் வருங்கால நடவடிக்கைகள், வணிகா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வுகாண வழிமுறைகள் விவாதிக்கப்படவுள்ளன. மேலும், பேரமைப்பின் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசித்து, தீா்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன என ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com