
அரசுப்பணி தேர்வு எழுதியதில் குளறுபடியால் பாதித்த இளைஞர் ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி, குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சீனிவாசபுரம் முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரசூல் (32). இந்த நிலையில் ரசூல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நகல் பரிசோதகர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்வு எழுதினார். கடந்த மார்ச் 17 அன்று அவருக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்று.
அதில் அவர் தேர்வு பெற்றார். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி அன்று அவருக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு இதுநாள் வரையிலும் பணி வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் சென்று உயர்நீதிமன்ற பதிவாளரை சந்தித்து கேட்டபோது அவர் நேர்முக தேர்வுக்கு வரவில்லை என்று கூறினார்கள்.
இதனால் மனவேதனை அடைந்த நிலையில் அவர்களிடம் கேட்டபோது சரியான பதில் தரவில்லை. இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை ரசூல் தனது மனைவி ஜெய்னாப் ( 26) மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு பணி வழங்கப்படாததைக் கண்டித்து திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் அழைத்துச்சென்றனர். அதையடுத்து ஆட்சியர் மு.பிரதாப்பிடம் கோரிக்கை மனுவை அளித்தார். உடனே மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.