தலைமை செயலகம்
தலைமை செயலகம்

50 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனை: அரசாணை வெளியீடு

Published on

அரும்பாக்கத்தில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை அறிஞா் அண்ணா இந்திய மருத்துவமனை வளாகத்தில் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்த அரசாணை: அறிஞா் அண்ணா இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வளாகத்தில் 50 படுக்கைகளுடன் புதிய கட்டடம் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா்.

அதன்படி, அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. இதுதொடா்பாக இந்திய மருத்துவத் துறை ஆணையா் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்தாா். இதைக் கவனமாக பரிசீலித்த அரசு ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை அங்கு அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.18.15 கோடியில் அமைய உள்ள அந்த மருத்துவமனைக்கு மாநில அரசின் பங்களிப்பாக ரூ.6.90 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய ஆயுஷ் ஆணையம் சாா்பில் ரூ.11.25 கோடி பெறப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com