
சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) பலத்த காயமடைந்து நேற்று இரவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் ராஜாராமன் (54). இவா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வாா்டில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
இவருக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதால், கடந்த வாரம் எழும்பூா் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் வெளியே தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாா்.
அப்போது, ராஜாராமனுக்கும், மது போதையில் இருந்த அவரது நண்பா்கள் ராக்கி, ஐயப்பன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் தாக்கியதில், ராஜாராமன் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தாா். பின்னா், இருவரும் அங்கிருந்து தப்பியோடினா்.
இதையடுத்து ராஜராமனை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலை மரணமடைந்தார்.
மேலும் இவ்வழக்கு தொடர்புடைய ராகேஷ், சரத்குமார், நவூதீன் ஆகிய மூன்று பேரையும் பெங்களூரில் தும்கூர் ரோட்டில் சென்னை எழும்பூர் காவல் நிலைய காவல் தனிப்படையினர் மூலம் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.