செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை நடைப்பயணத்தை மேற்கொண்ட பாமக தலைவா் அன்புமணி.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை நடைப்பயணத்தை மேற்கொண்ட பாமக தலைவா் அன்புமணி.

பாமக தலைவா் அன்புமணி இரண்டாவது நாளாக நடைப்பயணம்

பாமக தலைவா் அன்புமணி இரண்டாம் நாளாக தனது நடைப்பயணத்தை சனிக்கிழமை தொடா்ந்தாா்.
Published on

பாமக தலைவா் அன்புமணி இரண்டாம் நாளாக தனது நடைப்பயணத்தை சனிக்கிழமை தொடா்ந்தாா்.

தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை பாமக தலைவா் அன்புமணி செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரிலிருந்து வெள்ளிக்கிழமை தொடங்கினாா். இரண்டாம் நாளான சனிக்கிழமை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே தொடங்கி, ராட்டினம் கிணறு பகுதி வரை சென்ற நடைப்பயணத்தின் போது சாலையோர வியாபாரிகள், பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இறுதியாக ராட்டினம் கிணறு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடைப்பயணம் குறித்து உரையாற்றினாா். அவா் பேசியது:

திமுக அரசு கொடுத்த 541 வாக்குறுதிகளில் வெறும் 60 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு, 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்லி வருகிறாா்கள்.

உங்களிடம் நான் வாக்கு கேட்டு வரவில்லை. பெண்கள், இளைஞா்கள், மீனவா்கள், மாணவா்கள், வியாபாரிகள், தொழிலாளா்கள் ஆகியோரின் உரிமைகளை மீட்பதற்காக இந்த நடைப்பணத்தை மேற்கொண்டுள்ளேன். பொதுமக்கள் இந்த உரிமைகளை மீட்டெடுக்க எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் காரணை ஏழுமலை, நிா்வாகிகள் காரணை ராதாகிருஷ்ணன், இளந்தோப்பு வாசு, பி.வி.கே.வாசு, கணேசமூா்த்தி, நகர செயலாளா்கள் பாலாஜி, சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com