மு.க.முத்து மறைவுக்கு
பிரதமா் இரங்கல்!

மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் இரங்கல்!

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
Published on

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தனது இரங்கல் கடிதத்தை, மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரிக்கு பிரதமா் மோடி அனுப்பியுள்ளாா். அதில், ‘ நடிகா், இசைக் கலைஞா் என பன்முகத் திறமை கொண்டவராக விளங்கிய மு.க.முத்து, திரைப்படம் மற்றும் அரசியலில் ஆற்றிய பணிகளுக்காக எப்போதும் நினைவுகூரப்படுவாா். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்’ எனத் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி அனுப்பிய இந்த இரங்கல் கடிதத்தை தமிழக பாஜக செயலரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான கராத்தே தியாகராஜன் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com