
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சிவ சேனை (உத்தவ் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.
ஹிந்தித் திணிப்புக்கு எதிரான தங்களது துணிச்சலான எதிர்ப்பும், மகாராஷ்டிரத்தின் அடையாளத்தை உறுதியாக உயர்த்திப் பிடித்ததுமே மராட்டிய மக்களைத் தங்கள் மொழிக்காக ஓரணியில் இணைத்துள்ளது.
கூட்டாட்சியியலையும் மொழியின் மாண்பையும் பாதுகாக்கும் தங்களது பயணம் வலிமையோடு தொடர விழைகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தவ் தாக்கரே இன்று தனது 65ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.