சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்: ராஜேந்திர பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி...
Former AIADMK minister Rajendra Balaji
ராஜேந்திர பாலாஜி (கோப்புப்படம்)X
Published on
Updated on
1 min read

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி கண்கலங்கியபடி பேசியுள்ளார்.

"சிவகாசி எனது மண். என்னை சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆக்கியது இந்த மண். எனவே நான் வேறு தொகுதியில் போட்டியிட மாட்டேன். வரும் தேர்தலில் சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்.

பழனிசாமியின் பிரசார முகமாக உள்ளதால் என்னை குறி வைக்கின்றனர். திமுக ஆட்சியில் என் மீது குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். என்னை மிரட்டி பணியவைக்க திமுக நினைத்தது.

ஆனால் வரும் தேர்தலில் என்னை எதிர்த்து யார் நின்றாலும் நான் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவேன். உங்கள் அனைவருக்கும் நன்றி" என உருக்கமாகப் பேசியுள்ளார்.

Summary

Former AIADMK minister Rajendra Balaji has said that he will contest from the Sivakasi constituency in the 2026 Assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com