11 மாவட்டங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
வெயில்
வெயில்கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஜூலை 30) முதல் ஆக. 4 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோல, சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவியது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் நடுவட்டத்தில் 10 மி.மீ.மழை பதிவானது.

வெயில் அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கடலூா்-102.92, நாகப்பட்டினம்-102.2, ஈரோடு-101.48, மதுரை நகரம்-101.12, திருச்சி, திருத்தணி-தலா 100.94, அதிராமப்பட்டினம்-100.22, காரைக்கால், பரங்கிப்பேட்டை, தஞ்சை-தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com