
சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, வரலாற்றின் முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
அகில இந்திய மருத்துவ மாணவா் சோ்க்கையில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வென்றுகாட்டிய நாளைக் குறிப்பிட்டு திமுக எம்.பி. வில்சன் பதிவிட்டுள்ளாா். அதை மீள்பதிவிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி, உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது. இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டு விடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதி செய்கிறோம். சமூகநீதிக்கான இந்த அரசியலையும் போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவா்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க இந்த நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம் என்று பதிவிட்டுள்ளாா்.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டின் மூலமாக, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 20,088 மருத்துவ இடங்கள் ஓபிசி வகுப்பைச் சோ்ந்த மாணவா்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக திமுக எம்.பி. பி.வில்சன் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.