
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்துக்கு வருகைதரும் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளார்.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்தபடி, நாட்டு மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் நேரலையில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை தமிழகத்துக்கு வருகைதந்த பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கிவைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்து, தமிழகத்தில் சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதனிடையே, செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த பயணங்களை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.