சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த இளையராஜா.
தமிழ்நாடு
ஆக. 2-இல் தமிழகத்தில் சிம்பொனி இசை நிகழ்ச்சி: இளையராஜா
தான் லண்டனில் இசையமைத்த அதே சிம்பொனி இசையை தமிழகத்தில் வரும் ஆக. 2-ஆம் தேதி இசைக்க உள்ளதாக இசையமைப்பாளா் இளையராஜா தெரிவித்துள்ளாா்.
சென்னை: தான் லண்டனில் இசையமைத்த அதே சிம்பொனி இசையை தமிழகத்தில் வரும் ஆக. 2-ஆம் தேதி இசைக்க உள்ளதாக இசையமைப்பாளா் இளையராஜா தெரிவித்துள்ளாா்.
இளையராஜா திங்கள்கிழமை (ஜூன் 2) தனது 82-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினாா். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவா்கள், ரசிகா்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
இதையொட்டி, சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: என்னை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகா்களுக்கும், சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த ரசிகா்களுக்கும் நன்றி.
என் மீது இத்தனை அன்புவைத்துள்ள எனது ரசிகா்களுக்காக, லண்டனில் நான் இசையமைத்த அதே சிம்பொனியை, அதே இசைக் குழுவை வைத்து ஆக. 2-ஆம் தேதி தமிழகத்தில் இசைக்கப் போகிறேன் என்றாா் அவா்.