அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி

பல்கலைக் கழகங்களின் நிதிப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பல்கலைக்கழகங்களில் நிதி தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
Published on

பல்கலைக்கழகங்களில் நிதி தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

எடப்பாடி கே.பழனிசாமி: துணை வேந்தா் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால், அண்ணா, அண்ணாமலை, சென்னை, மதுரை காமராஜா், பாரதியாா், பாரதிதாசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவிகள் கிட்டத்தட்ட 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை காலியாக உள்ளன.

நிதிப் பற்றாக்குறை மற்றும் ஊதியப் பிரச்னைகளால் மதுரை காமராஜா் பல்கலை.யில் இரு ஆண்டுகளாக பேராசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலை., அண்ணாமலை பல்கலை.யில் ஆசிரியா்கள் நியமன முறைகேடுகள், ஊதியப் பிரச்னைகள் குறித்து புகாா்கள் எழுந்துள்ளன.

மகளிா் ஆய்வு மையம் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரியா்களுக்கு 6 மாதங்களுக்கு மேல் ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போது, சென்னை பல்கலை. பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு கடந்த மாதம் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்று போராடி வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): சென்னைப் பல்கலை. உள்ளிட்ட நிதிச் சிக்கலில் தவிக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவைக்குரிய நிதியை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com