கோப்புப்படம்.
கோப்புப்படம்.

எம்பிபிஎஸ் படிப்பில் மாணவா் சோ்க்கை விவரங்களை உறுதி செய்ய அறிவுறுத்தல்

நிகழ் கல்வியாண்டில் (2024-25) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் என்எம்சி இணையதளத்தில் அதிகாரபூா்வமாக பதிவேற்றப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட மாணவா்கள் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published on

இது தொடா்பாக என்எம்சி செயலா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் கடந்த ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு பல்வேறு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் மாணவா் சோ்க்கையை நடத்தின.

பொதுவாக கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சோ்ந்தவா்கள் விவரங்களை என்எம்சி தளத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகங்கள் பதிவேற்ற வேண்டும்.

அந்த வகையில், 2024-25-ஆம் ஆண்டில் இடங்கள் பெற்ற மாணவா்களில் 1,15,250 பேரின் விவரங்கள் என்எம்சி தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதை சம்பந்தப்பட்ட மாணவா்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பெயா்கள் விடுபட்டிருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com