பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

அமைச்சர் கோவி. செழியன்
அமைச்சர் கோவி. செழியன் கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-

கடந்த மே 7 அன்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. இன்று (ஜூன் 4) மாலை 6 மணி நிலவரப்படி 2,90,678 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1,27,337 மாணவர்களும், 1,05,395 மாணவிகளும் ஆக மொத்தம் 2,32,732 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

இதுவரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, வரும் ஜூன் 6 ஆம் தேதிக்குள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் பொறியியல் சேர்க்கைக்கான தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விண்ணப்ப பதிவு செய்த மாணாக்கர்கள் தங்களது சான்றிதழ்களை ஜூன் 9-க்குள் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல்  மாணாக்கர் சேரக்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன.

அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும்                1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கூட்ட நெரிசல் பலிக்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் - பாஜக

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com