
திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் 3,000-வது குடமுழுக்கு, நாகை மாவட்டம் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சேகர்பாபு,
"தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றபின் 3,000-வது குடமுழுக்கு இன்று திருப்புகலூர் கோயிலில் நடைபெற்றுள்ளது. கோயில்களின் பராமரிப்பிற்கும் கோயில் பொக்கிஷங்களைப் பாதுகாக்கவும் முதல்வர் தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறார்.
திருப்பதியில் முன்பதிவு செய்து தரிசனம் செய்வது போன்றே தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலும் ஆன்லைன் முன்பதிவு முறையில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வசதி விரைவில் கொண்டு வரப்படும்.
இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெறுவதாகவும் கூடிய விரைவில் முதல்வர் இதனை தொடக்கிவைப்பார்' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.