
சென்னையில் கட்டடக்கழிவுகளை சாலையில் கொட்டினாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மாதம் 21 ஆம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் கட்டுமானம் மற்றும் இடுப்பாட்டுக் கழிவுகள் மேலாண்மை சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய பயிலரங்கம் மற்றும் நெகிழி பயன்பாட்டைத் தடை செய்யும் விதமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைக்குழுக்கள் அடங்கிய பிரசார வாகனத்தினை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மண்டல குழு தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமானத் துறை சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.
துணை மேயர் மகேஷ் குமார் போசுகையில், சென்னை மாநகராட்சி தூய்மையாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் இந்தக் கட்டடக் கழிவுகளை அகற்றும் முறை. கட்டடக்கழிவுகளை தனியார் அமைப்பு மற்றும் அரசு ஒப்பந்த நிறுவனங்களும் உரிய முறையில் அகற்றப்படவில்லை என்றால்கூட அபராதம் விதிக்கப்படும். அரசு ஒப்பந்ததாரர்கள் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியில் ஈடுபட்டதாகவும் அதே போன்று ரிப்பன் மாளிகையிலும் அந்த பணி நடைபெற்றதாகவும், சென்னை மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பை - மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருப்பதாகவும் , அதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கட்டடக் கழிவுகள் அகற்றுவது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் பேசியவர் இந்த மாதம் 21 ஆம் தேதி இந்த திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது. ஆகையால்தான் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடக்கழிவுகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு இருப்பதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடக்கழிவுகள் நடுத்தர கட்டட கழிவுகள் என இருப்பதாகவும் அதிக கட்டடக்கழிவுகள் ஒரு ஏக்கர் அதிகமான இடம் என்றால் ஆறு மீட்டர் தூரத்திற்கு தகரம் மூலம் சுற்றுச் சுவர் அமைத்து அதன் பிறகு தான் அந்த கட்டடங்களை இடிக்க வேண்டும்.
கட்டடங்கள் இடிக்கும் பணியின் போது தகரம் மூடுவது மட்டுமல்லாமல் துணிகளை வைத்து மூட வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருப்பதாகவும் , மாநகராட்சி விதிமுறை மீறி செயல்படும் கட்டடப் பணியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
10 ஆயிரம் மீட்டர் முதல் 25 ஆயிரம்மீட்டர் உள்ள கட்டடங்கள் இடிக்கும்போது அவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
500 முதல் 20 ஆயிரம் சதுர அகலமுள்ள கட்டடங்கள் இடிக்கும் பொழுது அவர்கள் விதியை பின்பற்றப்படவில்லை என்றால் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராத விதிக்கப்படும். குறைந்தபட்ச கட்டடக்கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ஒரு மெட்ரிக் டன்னுக்கும் கீழுள்ள கட்டடக்கழிவுகள் பொதுமக்களை அகற்றிக் கொள்ளலாம் அதற்கு மேல் உள்ள கட்டடக்கழிவுகளை மாநகராட்சி தொடர்புக்கு கொண்டு வாகனங்கள் மூலம் அகற்றலாம். கட்டடக்கழிவுகளை அகற்றப்படாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
அபராதம் விதிப்பது மாநகராட்சி நோக்கமல்ல சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளரிடம் கழிவுகள் இருந்தால் அதனை அப்புறப்படுத்துமாறு அறிவுரை வழங்கியும், அவர்களுக்கு 15 நாள் அவகாசம் கொடுக்கப்படும். அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த கட்டடக்கழிவுகளை அகற்றாமல் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
15 மண்டலங்களில் மண்டலத்திற்கு ஒரு பகுதி என்று கட்டடக்கழிவுகள் கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு டன்னுக்கு குறைவாக இருந்தால் மக்களே அங்கு கொண்டுசென்று கழிவுகளை கொட்டலாம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.