உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து.
mk stalin wishes for tn tribal student
மாணவர் பரத் | முதல்வர் ஸ்டாலின்DIN
Published on
Updated on
1 min read

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்,

"உள்ளம் உவகையில் நிறைகிறது!

தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறையும் - அதன் செயலாளர் இளங்கோவும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்!" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com