தவெகவில் திமுக, அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள்! யார்யார்?

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் பற்றி...
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக மற்றும் அதிமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று இணைந்துள்ளனர்.

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில், கட்சியை தொகுதிவாரியாக வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறி, தவெகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக, அதிமுகவைச் சேர்ந்த மூன்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.

2011 சட்டப்பேரவை தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆர். ராஜலட்சுமி தவெகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியில் முக்கியத்துவம் அளிப்பதில்லை எனக் குற்றச்சாட்டை முன்வைத்து சில நாள்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த ராஜாட்சுமி, தற்போது தவெகாவில் இணைந்துள்ளார்.

திமுகவைச் சேர்ந்த வைகுண்டம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வம், அதிமுகவைச் சேர்ந்த வால்பாறை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் ஆகியோரும் தவெகவில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி, நீதிபதி

விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தவெகவில் இணைந்துள்ளார். அவருக்கு மாநில கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்த அருண்ராஜ், சமீபத்தில் விருப்ப ஓய்வுபெறுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ஐஆர்எஸ் பணியில் இருந்து இவரை மத்திய அரசு விடுவித்தது.

மேலும், முன்னாள் நீதிபதி சி. சுபாஷ், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மரிய வில்சன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com