தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

கல்வி நிதி தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு பற்றி...
SC Refuses To Urgently List TN Suit
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.2151.59 கோடி, அதற்கான 6 % வட்டி ரூ.139.70 கோடியும் சேர்த்து ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டுமென கடந்த மாதம் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.

மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காததால் தமிழ்நாட்டில் சுமார் 43 லட்சம் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் பி. வில்சன் கோரிக்கை முன்வைத்தார்.

ஆனால் நீதிபதிகள் பி. கே. மிஸ்ரா, மன்மோகன் அமர்வு, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டனர். இந்த வழக்கில் எந்த அவசரமும் இல்லை என்று கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com