
சென்னை: சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது, 9.69%பொருளாதார வளர்ச்சியோடு இந்தியாவின் என்ஜினாக தமிழ்நாடு உள்ளது என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய தொழில் கடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்கிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கிப் பெரும் பங்கு வகிக்கிறது. உலக வங்கியின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
3ஆம் கட்டமாக நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் மக்களின் தேவைகளை நிறைவேற்ற பெரும் பங்க வகிக்கிறது. இதற்க உலக வங்கி பெரிய அளவில் உதவியிருக்கிறது.ஏழைகளுக்கான குடியிருப்புகளை உருவாக்க 190 மல்லியன் டாலர் கடனை உலக வங்கி தந்துள்ளது. உலக வங்கி உதவியுடன் வரும் 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.
ஊரகப் பகுதிகளை மேம்படுத்தும் வகையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம், 20 லட்சம் ஊரகப் பகுதி ஏழை மக்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கியுடன் வெறும் நிதி மட்டுமல்லாமல் நிபுணத்துவத்தையும் பெற்று தமிழகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் என்ஜின்-ஆக தமிழ்நாடு விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், உலக வங்கியுடன் நம்முடைய கூட்டாண்மை 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயக் கடன் திட்டத்தில் தொடங்கியது. அப்போது இருந்து, தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி போன்ற பலதரப்பட்ட துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
இதையும் படிக்க.. உண்மையான அன்னபெல்லா பொம்மைக்கு என்ன ஆனது? மக்கள் கலக்கம்!
2022-ஆம் ஆண்டில், புது டெல்லிக்கு வெளியே தன்னுடைய முதல் மண்டல அலுவலகத்தை உலக வங்கி சென்னையில்தான் அமைத்தார்கள். செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு உதவி செய்து, வேகமான மற்றும் வலுவான ஒருங்கிணைப்புக்கும் வழி ஏற்படுத்தி, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவுடனான உலக வங்கியின் உறவை இந்த அலுவலகம் மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.
1980-ஆம் ஆண்டு மற்றும் 1990-ஆம் ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ‘தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம்’ மற்றும் 2004-ஆம் ஆண்டிலும் 2010-ஆம் ஆண்டிலும் செயல்பாட்டில் இருந்த தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம். இந்த இரண்டும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன்களில் முன்னேற்றம் காண சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது. இன்றைக்கு தமிழ்நாடு இந்தத் துறைகளில் இந்தியாவிற்கே லீடர் என்று சொல்லக்கூடிய இடத்தை அடைந்திருக்கிறது.
அடுத்து, வறுமையை ஒழித்து ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு செயல்படுத்தப்பட்ட ‘வாழ்ந்து காட்டுவோம்’ எனும் முன்மாதிரி திட்டம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இதனால் முன்னேறி இருக்கிறார்கள். பெண்களுக்கான அதிகாரத்தை வழங்கியது மட்டுமல்லாமல், உழவர்களுக்கு நிலைத்த சமுதாயக் கட்டமைப்புகளையும் இந்தத் திட்டம் உருவாக்கி தந்திருக்கிறது.
பெண்கள் தலைமையேற்று நடத்தக்கூடிய 8 ஆயிரத்து 400 நிறுவனங்களுக்கு 2022-ஆம் ஆண்டிலிருந்து 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை 267 கோடி ரூபாய்க்கு இந்தத் திட்டம் மூலம் கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஊரகப் பகுதிகளில், 1 இலட்சம் பேர் புதிய தொழில்கள் தொடங்கவும், 53 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தத் திட்டம் சாதனை படைத்திருக்கிறது.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 750 கி.மீ. சாலைகளை மேம்படுத்தி, விபத்துத் தடுப்பு பகுதிகள் உட்பட பல்வேறு பராமரிப்பு பணிகளை 2 ஆயிரம் கி.மீ. சாலைகளில் மேற்கொள்ள உதவியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.