
தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த வாரமே நடைபெற வேண்டியது. எனக்கு உடல்நிலை சரியில்லாததால் இந்த வாரம் நடத்தப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதற்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று மட்டும் ரூ. 3,120 கோடி வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். தேதி அறிவிக்கப்படும். சென்ற முறை எப்படி சரியாக வழங்கப்பட்டதோ அதேபோல இந்த முறை விடுபட்டவர்களுக்கு நிச்சயமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.