சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறை
சென்னை அரசு அருங்காட்சியகம்
சென்னை அரசு அருங்காட்சியகம்
Published on
Updated on
1 min read

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த 2003 முதல் 2007 ஆண்டுவரையில் நுழைவுக் கட்டணம் உள்பட அருங்காட்சியகப் பணம் ரூ. 5.44 லட்சத்தை கையாடல் செய்த வழக்கில், பணி ஓய்வுபெற்ற கணக்காளர் ஜஹாருல்லா, மேற்பார்வையாளர்களான ஜவஹர், ஜெயராஜ், உதவி இயக்குநர் தேவதாஸ் ஆகிய நால்வருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தமாக ரூ. 15.5 லட்சம் அபராதம் விதித்தும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், வழக்கில் சம்பந்தப்பட்ட தேவதாஸ் உயிரிழந்ததால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.

நாட்டின் இரண்டாவது மிகப் பழமையான அருங்காட்சியகம் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ளது. 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் 46 காட்சியகங்கள் கொண்ட 6 கட்டடங்கள் உள்ளன.

பழங்கால கலைப்பொருட்கள், கல் சிற்பங்கள், தாவரவியல் காட்சியகங்கள், படத் தொகுப்புகள் ஆகியவை பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். மேலும் நாட்டுப்புற கலை மற்றும் இசையை பாதுகாக்கும் காட்சியகங்களும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com