மகப்பேறு விடுப்பு முடித்த 209 பெண் காவலா்களுக்கு விரும்பும் இடத்தில் பணி!

மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பும் 209 பெண் காவலா்களுக்கு அவா்கள் விரும்பும் இடத்திலேயே பணி.
மகப்பேறு விடுப்பு முடித்த 209 பெண் காவலா்களுக்கு விரும்பும் இடத்தில் பணி!
Updated on

மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பும் 209 பெண் காவலா்களுக்கு அவா்கள் விரும்பும் இடத்திலேயே பணி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலா்கள், அவா்கள் விரும்பும் மாவட்டத்துக்கு பணியிடமாறுதல் கிடைக்காமல் கடும் சிரமத்தைச் சந்தித்து வந்தனா். இதைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலா்கள் அவா்கள் விரும்பும் இடத்திலேயே பணியமா்த்தப்படுவா் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவல் ஆளிநா்களுக்கு, அவா்கள் விரும்பும் மாவட்டத்துக்கு பணியிடமாறுதல் வழங்கப்படும் என்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, மொத்தம் 209 பெண் காவலா்கள், தங்களது பேறுகால விடுப்புக்குப் பிறகு, குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனா்.

அதன்படி, பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 209 பெண் காவல் காவலா்களுக்கும், அவா்கள் விரும்பிய மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com