சென்னை பாரிமுனையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்ற மூத்த மாணவிகள்.
சென்னை பாரிமுனையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்ற மூத்த மாணவிகள்.

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
Published on

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத் தோ்வுகள் நடைபெற்றது. பின்னா் ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. அதன் பின்னா் திங்கள்கிழமை (ஜூன் 16) கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்கநரக ஆணையா் எ.சுந்தரவல்லி அறிவித்திருந்தாா்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவ, மாணவிகளும், முதுநிலை பட்டபடிப்பில் உள்ள இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளும் திங்கள்கிழமை (ஜூன் 16) வகுப்பறைகளுக்கு உற்சாகமாகத் திரும்பினா்.

தமிழகத்தில் 183 அரசுக் கல்லூரிகள், 161 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 1,299 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் என 1,643 கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சமீபத்தில் முதலாமாண்டு இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் சோ்க்கைகள் நடைபெற்றன. இவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தொடங்க கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. சில தனியாா் மற்றும் அரசு உதவிபெரும் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கும் வகுப்புகள் தொடங்கிவிட்டன.

X
Dinamani
www.dinamani.com