
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.
முன்னாள் விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து, திருவனந்தபுரத்தில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லையைச் சேர்ந்த சு. முத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.
நெல்லையில் கடந்த 1951 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி பிறந்தவர். அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு என 70க்கும் அதிகமான நூல்களை எழுதியவர். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. தினமணி நாளிதழின் கட்டுரையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரத்தில் இருந்து, மதுரையில் உள்ள அவரது மகள் டாக்டர் கலைவாணி இல்லத்துக்கு நெல்லை முத்து உடல் கொண்டு வரப்பட்டு அவரது இறுதிச்சடங்குகள் மதுரையில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.