மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
Published on

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.6.04 கோடியில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தக் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

சென்னை மெரீனா கடற்கரையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைப்பதுடன், அங்கிருந்தபடியே மாநகரின் பிற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் செயல்பாட்டையும் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com