எய்ம்ஸ் குறித்து கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியீடு: முதல்வர் ஸ்டாலின்

மதுரை எய்ம்ஸ் குறித்து கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
MK Stalin Photo
முதல்வர் மு.க. ஸ்டாலின்MK Stalin
Published on
Updated on
1 min read

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னவானது என்று கேள்வி கேட்டதால், கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மதுரை வந்த உள்துறை அமைச்சரிடம், எய்ம்ஸ் என்னவானது எனக் கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும், 2026 தமிழக பேரவைத் தேர்தலுக்கு இதுபோதும் என்று நினைத்துவிட்டார்களா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமாண விடியோ இன்று காலை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் இறங்குதளம், குறுங்காடு என பல வசதிகளுடன் அமையவிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விடியோவை இணைத்து இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

மதுரைக்கு வந்த மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.

இதையும் படிக்க.. திறக்கப்படுகிறது கேஜிஎஃப் தங்கச் சுரங்கம்! 80 ஆண்டுகளுக்குப் பின்! இனி தங்கம் விலை?

அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.

2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா?

இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையாதது குறித்து தமிழகத்தில் அவ்வப்போது விவாதங்கள் எழும் நிலையில், மருத்துவமனையின் முப்பரிமாண மாதிரிப் படம் வெளியாகியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com