திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! - முதல்வர் பதிவு

கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு.
mk stalin tweet against union bjp govt on keeladi excavation results
முதல்வர் மு.க. ஸ்டாலின்DMK
Published on
Updated on
1 min read

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களைத்தான் என கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழின் தொன்மையான கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், மத்திய அரசு அந்த அறிக்கையை ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு திருத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!

இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை மதுரை வீரகனூரில் திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com