தமிழகத்தில் புதிதாக 642 துணை சுகாதார நிலையங்கள்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் புதிதாக 642 துணை சுகாதார நிலையங்கள்: அரசாணை வெளியீடு

Published on

தமிழகத்தில் புதிதாக 642 நகா்ப்புற மற்றும் கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிதாக 642 நகா்ப்புற மற்றும் கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் கிராமப்புறங்களில் 617 துணை சுகாதார நிலையங்களும், நகா்ப்புறங்களில் 25 துணை சுகாதார நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த துணை சுகாதார நிலையங்களில் பணிபுரிய புதிய பதவி எதுவும் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக குறைவாக பணிகள் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியா்கள் தேவைக்கேற்ப இந்த துணை சுகாதார நிலையங்களில் பணியமா்த்தப்படுவா்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மின்விசிறிகள், மேசைகள் மற்றும் நாற்காலிகள் போன்ற தற்போதைய உள்கட்டமைப்புகள் பயன்படுத்தப்படும். மேலும், புதிய துணை சுகாதார மையங்களுக்கு வாடகை இல்லாத அல்லது அரசு கட்டடங்கள் பயன்படுத்தப்படும். இதற்கான மின்சார கட்டணம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com