சென்னையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் திட்டமானது, விரைவில் மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுப்பாட்டில் வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை இணைப்பது தொடர்பான வரைவை விரைவுபடுத்த, ரயில்வே வாரியத்துக்கு பிரதமர் அலுவலகம் நேரடியாக உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை தெற்கு ரயில்வே கையிலெடுத்திருந்தாலும், பணிகள் தாமதமாகிவந்ததால், பிரதமர் அலுவலகம் நேரடியாக உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ரயில்வே வாரியம் சில கேள்விகளை தெற்கு ரயில்வேயிடம் கோரியிருப்பதாகவும், அதன் மூலம், விரைவாக ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பறக்கும் ரயில் திட்டத்தை, மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், இதற்கான நடைமுறைகளை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்படைக்க நீதி ஆயோக் கூட்டத்திலும், பிரதமர் நரேந்திர மோடியிடமும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்த நிலையில், பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பறக்கும் ரயில் திட்டமானது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை இயக்கச் செலவு ஆண்டுக்கு ரூ.100 கோடி அளவுக்கு தெற்கு ரயில்வே செலவிட்டு வரும் நிலையில் வருவாய் ரூ.50 கோடியாக உள்ளது. இந்த திட்டம் மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கப்படும்போது, மக்களுக்கு பயனுள்ளதாகவும் வருவாய் ஈட்டும் திட்டமாகவும் மாறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.