வள்ளுவம் போற்றுதும்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவுடன் இன்று திறக்கப்டுவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..
valluvar kottam
புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்
Published on
Updated on
1 min read

சென்னை வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில் ரூ.80 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் புதுப்பொலிவுடன் உள்ள வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) மாலை திறந்து வைக்கிறாா்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டு, "தமிழரின் அடையாளங்களை எங்கும் நிறுவிய கலைஞரின் கனவுப் படைப்பான வள்ளுவா் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!

அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் - வள்ளுவத்தையும் போற்றுவோம்! மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

சிறப்பம்சங்கள் என்ன?

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டத்தில், தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி பரப்பில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் கலையரங்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வா் கருணாநிதி உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களைக் கொண்ட பலகைகள் அமைக்கப்பட்டு, ஓவியங்களுடன் கு மணிமாடம் புதிய வடிவம் பெற்றுள்ளது. 100 போ் அமரும் வசதியுடன் திருக்கு ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடம்: 27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப் பகுதிகளில் 162 காா்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளன. பொதுமக்களின் வசதிக்காக, 3,336 சதுர அடியில் சிறப்பான உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 72 போ் வரை அமர வசதிகள் உள்ளன. அத்துடன் நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்த் தோ் வடிவில் 106 அடி உயரமுடைய கல் தோ் ஒலி - ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com