என் குழந்தைகள் யோகா, சிலம்பம் கற்கிறார்கள்; தாய்மொழி முக்கியம்: நமீதா பேச்சு

வேலூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி பற்றி...
Tamilisai, namita particiapated in vellore yoga programme
வேலூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன், நமீதா.DIN
Published on
Updated on
2 min read

ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான், ஆனால் அதற்கு முன் தாய்மொழிதான் முக்கியம் என வேலூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நமீதா கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக நடிகை நமீதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகா செய்தனர். சிறப்பாக யோகா செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், "இன்று உலகம் முழுவதும் 170 நாடுகளில் யோகாவைக கொண்டாட பாரத பிரதமரே காரணம். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். யோகா செய்தால் மகிழ்ச்சி உண்டாகும், வாழ்வு மேம்படும்.

டிசம்பர் 21 தியான தினமாக கொண்டாட வேண்டும் என மோடி கூறியுள்ளார். நம் அனைவரின் நோக்கமும் நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும் என்பதுதான்" எனக் கூறினார்.

பின்னர் பாஜக பிரமுகரும் நடிகையுமான நமீதா பேசுகையில்,

"யோகா 5 ஆயிரம் வருடம் பழமையானது. 2007ல் பாலிவுட் நாயகி கரீனா கபூர் யோகா மூலம் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்தபின் தான் யோகா பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது.

ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான். ஆனால் அதற்கு முன் கண்டிப்பாக தாய்மொழிதான் முக்கியம். என் குழந்தைகளுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்தி தெரியும். ஏனென்றால் இது அவர்கள் தாய்மொழி. என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது, ஆனால் கண்டிப்பாக ஜெய் அனுமன் தெரியும். என் குழந்தைகளுக்கு அனுமன் ரொம்ப இஷ்டம். இதை நான் பெருமையாக தெரிவித்துக்கொள்கிறேன். என் குழந்தைகளோடு நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் தாய் மொழியில்தான் பேசுகிறேன்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய நமீதா,

"யோகா மிகவும் பழமையானது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் பிரபலமாகி வருகிறது. அது ஏன் என்று தெரியவில்லை. மேலும் என் குழந்தைகளுக்கு நான் யோகா, சிலம்பம் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கிறேன். நான் யோகா செய்தது கிடையாது. ஏனென்றால் என் பெற்றோருக்கு அதுபற்றி தெரியாது. தெரிந்திருந்தால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். ஆனால் நான் ஜிம் செல்கிறேன். எனது கணவர் நன்றாக யோகா செய்வார்" எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com