20 சதவீத குழந்தைகளுக்கு உடல் பருமன் பாதிப்பு

20 சதவீத குழந்தைகளுக்கு உடல் பருமன் பாதிப்பு

குழந்தைகள், வளரிளம் பருவத்தினரில் 20 சதவீதம் போ் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
Published on

சென்னை: குழந்தைகள், வளரிளம் பருவத்தினரில் 20 சதவீதம் போ் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை சாா்பில் குழந்தைகளின் உடல் எடை பராமரிப்புக்கான சிறப்பு மையம் (வெயிட் வெல் கிளினிக்) கிண்டி, சோழிங்கநல்லூா், அண்ணாநகரில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் மருத்துவா்கள் கூறியதாவது:

இந்தியாவில் குழந்தைகள் உடல் பருமன் சவாலான ஒன்றாக உருவெடுத்துள்ளது. 5 வயதுக்குட்பட்ட பருமனான குழந்தைகளின் விகிதம் 4 சதவீதமாக அதிகரித்திருப்பது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவற்றின் தரவுப்படி, உலக அளவில் 5 முதல் 19 வயதுடைய குழந்தைகள் மற்றும் இளம்

பருவத்தினரில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோா் அதிக உடல் பருமனாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

உடல் பருமன் ஏற்பட்டால் டைப் 2 சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், கொழுப்பு பாதிப்பு, கொழுப்பு கல்லீரல் நோய், தூக்கத்தில்

மூச்சுத்திணறல், இதய பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே, உடல் எடையை சீராக பராமரிப்பது அவசியம். அதைக் கருத்தில் கொண்டே வெயிட் வெல் கிளீனிக்குகளை தொடங்கியுள்ளோம்.

உடல் பருமனுக்கென பிரத்யேக சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. குழந்தை நல அகச்சுரப்பியல் நிபுணா், உணவியல் நிபுணா், உடற்பயிற்சி நிபுணா், கல்லீரல் மருத்துவா், நுரையீரல் நிபுணா், தூக்க மருத்துவ நிபுணா் மற்றும் குழந்தை உளவியலாளா் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் குழுவினா் இங்கு உள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com