ஜூன் 27, 28ல் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக ஆலோசனைக் கூட்டம் குறித்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு பற்றி...
AIADMK Edappadi palanisamy
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிENS
Published on
Updated on
1 min read

அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வருகிற ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமியின் ஆணைப்படி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் 27.6.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும்

28.6.2025 சனிக்கிழமை காலை 10 மணியளவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

இக்கூட்டங்களில், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும் வரும் பேரவை பொதுத் தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும் கருத்துப் பரிமாற்றமும் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.

ஆகவே தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாள்களில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com