
சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று காலை முதலே சில்லென்ற வானிலை காணப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலையில் லேசான தூறல் போட்டு பூமியும் குளிர்ந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காலை 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 28 வரை மழை
தமிழகத்தில் பரவலாக ஜூன் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.