மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி: சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு

மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி நடைபெற்று வரும் நிலையில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அணையின் 16 மதகு வழியாக பாயும் காவிரி - கோப்புப்படம்
மேட்டூர் அணையின் 16 மதகு வழியாக பாயும் காவிரி - கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சேலம் : மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் பகுதியில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிகளை சென்னை ஐ.ஐ.டி. கட்டடவியல் துறை பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது 16 கண் மதகு பாலம் வழியாக உபரி நீர் திறக்கப்படும். இதன் மூலம் 30 டி.எம்.சி. வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்நிலையில் 19 கோடி ரூபாய் மதிப்பில் 16 கண் மதகு பாலத்தின் தூண்கள் மற்றும் வளைவுகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை இன்று சென்னை ஐ.ஐ.டி.யின் கட்டடவியல் துறை பேராசிரியர் அழகு சுந்தர மூர்த்தி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அழகு சுந்தரமூர்த்தி கூறுகையில் சேதம் அடைந்த கான்கிரீட் பூச்சுகளை அகற்றிவிட்டு மைக்ரோ கான்கிரீட் பூசப்பட்டு தூண்கள் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மைக்ரோ கான்கிரீட் பூசுவதன் மூலம் 50 முதல் 100 ஆண்டுகள் வரை தூன்கள் பலமாக இருக்கும் என்றார்.

16 கண் மதகு பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சேலம் மேல் காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், அணை நிர்வாக பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com