
மாம்பழக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது.
மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திடவும் -
பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வு முறையில் மாநில அரசும் மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் பிஎம் - ஆஷா சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தவும் வலியுறுத்தி
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.