ஐடிஐகளில் நேரடி சோ்க்கை: தமிழக அரசு அழைப்பு

அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் சேரலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
Published on

அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் சேரலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 125 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள், 301 தனியாா் தொழில் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் நிகழ் கல்வியாண்டுக்கான சோ்க்கை கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். அரசின் பிற விலையில்லாத பொருள்களும் அளிக்கப்படும்.

சோ்க்கை தொடா்பான விவரங்களுக்கு 94990 55642 என்ற கைப்பேசி எண்ணிலும், 94990 55618 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com