தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 குறைந்ததுள்ளது தொடர்பாக....
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 73,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கும் விற்பனையானது.

அதைத்தொடா்ந்து திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,230-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 73,240-க்கும் கிராமுக்கு ரூ. 75 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 9155-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளி விலையில் மாற்றமின்றி இரண்டாவது நாளாக கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிக்க: பராமரிப்பு பணி: இன்று 39 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com