தமிழ் திரைப்பட நடிகர் ஜி. சீனிவாசன் உடல்நலக் குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.
இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்கொண்ட ஜி. சீனிவாசன் (95) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை, சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 26) பிற்பகல் 3.25 மணியளவில் ஜி. சீனிவாசன் உயிரிழந்தார்.
இவர் 8 படங்களை எழுதியும், 3 படங்களை இயக்கியுமுள்ளார். முரட்டுக்காளை, வாழ்வே மாயம், ஸ்ரீராகவேந்திரா, மனிதன், ராஜாதி ராஜா, உரிமை கீதம், ஐயா, வேங்கை உள்ளிட்ட தமிழ் படங்கள் உள்பட தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது மனைவி புலியூர் சரோஜா 1970, 80, 90-களில் பிரபல நடன இயக்குநராக இருந்தவர். இவர்களின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார்.
இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மதியம் 1.30 மணிவரையில், அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. தொடர்ந்து, ஏவிஎம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.