ஜி.கே. வாசன்
ஜி.கே.வாசன்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

Published on

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, விரட்டியடித்து, மீன்களை அபகரித்துச் சென்றனா். மீனவா்களின் வலைகளை வெட்டினா். இந்நிலையில் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை காலை கரை திரும்பினா்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவா்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனா். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து வருமானம் ஈட்டுவதற்காக சென்ற மீனவா்கள் நஷ்டம் அடைவது என்பது பெரிதும் கவலைக்குரியது.

தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நல்ல தீா்வு காண வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள மீனவா்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை இலங்கை அரசிடம் இருந்து மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com