அதிமுகவில் வடசென்னை வடக்கு (மேற்கு), கன்னியாகுமரி மாவட்டச் செயலர்கள் மாற்றம்

அதிமுகவில் வடசென்னை வடக்கு (மேற்கு), கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
aiadmk office
அதிமுக தலைமை அலுவலகம்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அதிமுகவில் வடசென்னை வடக்கு (மேற்கு), கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் விடுத்துள்ள அறிக்கையில்,

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் D. ஜாண்தங்கமும், திருவட்டார் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் R. ஜெயசுதர்ஷனும்,

இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் R. ஜெயசுதர்ஷன், MBA., (கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு அச்சக முன்னாள் தலைவர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

கட்சி தொண்டர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்

வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் T.G.வெங்கடேஷ்பாபு, Ex. M.P., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் புரசை V.S. பாபு, Ex. M.L.A., ஆகியோரும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் புரசை V.S. பாபு, Ex. M.L.A.,செம்பியம், பெரம்பூர், கொளத்தூர் மேற்கு பகுதி) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

SUMMARY

The AIADMK North Chennai North (West) and Kanyakumari district secretaries have been changed.

புதுச்சேரி: 3 பாஜக எம்எல்ஏக்கள் திடீர் ராஜிநாமா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com