'நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்' - அமித் ஷாவுக்கு கனிமொழி பதில்

ஹிந்தி பற்றிய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக கனிமொழி பதில்...
Kanimozhi's reply to Amit Shah on hindi language
அமித் ஷா | கனிமொழி X
Published on
Updated on
1 min read

ஹிந்தி பற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார்.

தில்லியில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்தில் பேசுபவர்கள் எதிர்காலத்தில் வெட்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து நேற்று ராஜ்பாஷா துறையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, 'ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் போன்றது' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுபற்றி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

"சரியாகச் சொன்னீங்க. அதையேதான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

DMK Parliamentary Party leader Kanimozhi has responded to Union Minister Amit Shahs comments on Hindi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com