மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளதைப் பற்றி...
Water inflow in Mettur Dam.
மேட்டூர் அணையில் நீர்வரத்து.படம் | dns
Published on
Updated on
1 min read

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.27 அடியாகவும் உயர்ந்தது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பிய நிலையில் உள்ளன.

கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

உபரி நீர்வரத்து காரணமாக நேற்று(ஜூன் 26) காலை வினாடிக்கு 18,290 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 37,263 கன அடியாகவும், இன்று(ஜூன் 27) காலை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று காலை 112.73 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.27 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 84.22 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காவிரி கரையோரங்களில் முகாமிட்டிருந்த மேட்டூர் அணை மீனவர்கள் தங்களது முகாம்களை மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அடிபாலாறு செட்டிபட்டி உள்ளிட்ட முகாம்களில் உள்ள மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.

Summary

Mettur Dam water flow has increased to 43,892 cubic feet per second. The water level of Mettur Dam rose by 1.27 feet in a single day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com